Saturday, March 17, 2012

கவிதை அரங்கேறும் நேரம்



சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)


படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

No comments:

Post a Comment