ஷங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் இனிமையானவை. அதிலொரு இனிய பாடல் தேவி வந்த நேரம் - பாலுவும் வாணிஜெயராமும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். பொதுவாகப் பாடல்களின் சரணங்கள் ஒரே மெட்டில் திரும்ப வரும். அபூர்வமாகச் சில பாடல்களில் சரணஙகள் ஒரே மாதிரி மெட்டில் இல்லாது வேறு மாதிரியாகப் பாடியிருப்பார்கள். இப்பாடலில் முதல் சரணத்தை வாணிஜெயராம் "விழியெல்லாம் ஒளி வெள்ளம்" என்று துவங்கிப் பாடுவதும், இரண்டாவது சரணத்தை பாலு "மண்ணும் விண்ணும் ஒன்றாய்" என்று துவங்கிப் பாடுவதும் வெவ்வேறு மாதிரியாக அமைந்திருப்பதைக் கவனியுங்கள்.
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
சேரும்..
விழியெல்லாம் ஒளி வெள்ளம்
எங்கள் வீடெங்கும் தீபங்களே
மனமெல்லாம் இசை வெள்ளம்
இன்பம் மாறாத நாதங்களே
எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது
நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
சேரும்..
மண்ணும் விண்ணும் ஒன்றாய்
உந்தன் மான்விழிப் பார்வையில் கண்டேன்
கண்ணும் நெஞ்சும் ஒன்றாய்
இந்தக் கங்கையில் ஆடிட வந்தேன்
விண்ணோடும் காணாத சொர்க்கங்களே
விண்ணோடும் காணாத சொர்க்கங்களே
எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
No comments:
Post a Comment