நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
படம்: நினைப்பது நிறைவேறும்
குரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்
இசை: M.L.ஸ்ரீகாந்த்
பாடல்: மணி
super
ReplyDeleteமறக்க முடியாத மனதை நெகிழ வைக்கும் மயக்கும் பாடல்
ReplyDelete