Thursday, February 10, 2011

மேகம் தான் இதில் மழையே இல்லை

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்றேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை


ஜோதியென்றேன் இருளைப் போக்கயில்லை
தோணியென்றேன் நதியைக் கடக்கயில்லை
நிலவென்றேன் மேகத்திலே மறைந்துகொண்டாளா
மலரென்றேஎன் இதழ்களை மூடிக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளா
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளா ஹஹ
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளா

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை

பொன் மாலையென்றேன் தென்றல் வீசவில்லை
பூ மாலையிட யோகம் எனக்கு இல்லை
சொப்பனத்தில் நினைத்திருந்தேன் ராமனாக
சுயம்வரத்தில் என்னை நினைத்தால் ராவணன் போல
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்றேன்




Get this widget | Track details | eSnips Social DNA


படம்: நெஞ்சில் ஒரு ராகம்
இயக்குநர்: விஜய ராஜேந்தர்

No comments:

Post a Comment